தென் மாகாண விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படும் முன்னணி நிறுவனம்.
"2030ஆம் ஆண்டளவில் உணவு மற்றும் விவசாய உற்பத்தியில் செழிப்பை அடைந்த சிறந்த மாகாண விவசாய விரிவாக்க சேவையாக மாறுதல்"
"தென் மாகாணத்தின் உணவு மற்றும் விவசாய உற்பத்தித் துறையின் செழிப்புக்காக ஒரு சிறந்த விவசாய விரிவாக்க சேவையை நிறுவுதல், இயற்கை வளங்களை நிலைத்தன்மையுடன் பயன்படுத்துதல், திறனுடைய விவசாய உற்பத்தி, விவசாய வணிகம் மற்றும் சந்தைப்படுத்தலை மேம்படுத்துதல் மற்றும் விவசாய சமூகத்தை வலுப்படுத்துவதன் மூலம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்"
விவசாய சவால்களை தீர்த்து நிலைத்தன்மையான வளர்ச்சியை உறுதிசெய்வதற்கான உங்கள் நம்பகமான பங்காளி. திணைக்களத்தின் முக்கிய பொறுப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
மாவட்ட மட்ட அபிவிருத்தி மற்றும் திட்ட இலக்குகளை நடைமுறைப்படுத்துதலும் மேற்பார்வையிடுதலும்.
நிபுணத்துவ வழிகாட்டலுடனும் கள ஆதரவுடனும் விவசாய தொழில்நுட்ப பிரச்சினைகளை தீர்த்தல்.
நவீன விவசாய முறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் தொடர்பான நடைமுறை பயிற்சியை வழங்குதல்.
விவசாய அபிவிருத்திக்காக பயனாளிகளுக்கு நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்குதல்.
பயிர் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கள வருகைகள், பரிந்துரைகள் மற்றும் பின்தொடர்தல்.
விவசாயத்தில் இளையோர் பங்கேற்பையும் சுயதொழில் வாய்ப்புகளையும் ஊக்குவித்தல்.
காலோசித விவசாய உதவிக்காக அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுதல்.
கண்காட்சிகள், கருத்தரங்குகள் மற்றும் கள செயல்நிரூபணங்களை ஏற்பாடு செய்தல்.
தரமான விதைகளை சான்றளித்தல், தரவு சேகரிப்பு மற்றும் பயிர் சேத அறிக்கைகளை முகாமை செய்தல்.
வளர்க்கப்படாத நிலங்களை முகாமை செய்தலும் தாவர பாதுகாப்பு சேவைகளை பேணுதலும்.